சீனப் பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சி
2021-04-17 17:07:22

இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 24 இலட்சத்து 93 ஆயிரத்து 100 கோடி யுவானாகும். கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட இது 18.3 விழுக்காடு அதிகம் என்று சீன அதிகார வட்டாரம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தவிரவும், இதர முக்கிய பொருளாதார குறியீடுகளிலும் பத்து விழுக்காட்டுக்கு மேலான அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. இவற்றில் நுகர்வுத் துறையின் வளர்ச்சி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2020ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 54.3 விழுக்காடு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் மிகப் பெரிய நுகர்வு சில்லறைச் சந்தையாக சீனா மாறி வருகிறது.

வலுவாக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரத்தினால் உலகிற்கு என்ன பயன்?சர்வதேச நாணய நிதியத்தின் பொதுச் செயலாளர் கவோல்கிவாவின் பதிலைப் பார்ப்போம்.

சீனப் பொருளாதாரத்தின் மீட்சியினால், வர்த்தகம், மூலவளம், நுகர்வுப் பொருட்கள் முதலிய துறைகளில் சீனாவின் தேவை அதிகரித்து வருகின்றது. இது உலகில் இதர நாடுகளுக்கு ஆக்கப்பூர்வ பயன் தரும் என்று அவர் கூறினார்.

இவ்வமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கையில், சீனப் பொருளாதார வளர்ச்சியின் மீதான மதிப்பீடு முந்தைய 8.1 விழுக்காட்டிலிருந்து 8.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது.