ஆசிய-பசிபிக் அமைதியைப் பாதிக்கும் சக்தியாக மாறி வரும் அமெரிக்க-ஜப்பான் கூட்டாணி
2021-04-17 18:14:28

அண்மையில், அமெரிக்கா மற்றும் ஜப்பானின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், அமெரிக்க-ஜப்பான் கூட்டணியின் முக்கியத்துவத்தைத் தவிர இந்தோ-பசிபிக் நிலைமை பற்றியும் அதிகமாக கூறப்பட்டிருந்தது. இப்பிரதேசத்தில் சீனா பொருளாதாரம் உள்ளிட்ட பல விடயங்களில் வலுக்கட்டாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இது குற்றஞ்சாட்டியது. தவிரவும், 1969ஆம் ஆண்டுக்குப் பின் இரு நாட்டுக் கூட்டறிக்கையில் தைவான் நீரிணை பிரச்சனை பற்றி விமர்சனம் வழங்குவது இது முதல் முறையாகும்.

சீனாவை தடுத்து கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் கொள்கையைப் பின்பற்றுவதில் ஜப்பான் மிக சுறுசுறுப்பாக செயல்படும் ஆசிய நாடாக மாறியுள்ளது. அதற்கு இரு காரணங்கள் உண்டு. முதலில், ஜப்பானில் இன்றுவரையிலும் அமெரிக்காவின் ராணுவ பரவல் இருக்கும். இது அந்நாட்டின் வெளியுறவு அதிகாரத்தைப் பாதிப்பது உறுதி. இரண்டாவதாக, ஜப்பானும் சீனாவைக் கட்டுப்படுத்த விரும்புகின்றது.

இத்தகைய அமெரிக்க-ஜப்பான் கூட்டணி மேலாதிக்க வாதத்தை வெளிப்படுத்தியுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பைப் பாதிக்கும் இக் கூட்டணி இந்தோ-ஆசிய பிரதேசத்தில் நெரெதிர் சூழலை உருவாக்கும்.