அண்டை நாடுகளுடன் நட்பார்ந்த முறையில் பழகுவதில் கவனம்:சீனா
2021-04-18 17:20:18

அண்டை நாடுகளுடன் இணைந்து அன்பாகப் பழகி, நட்புறவை வலுப்படுத்தி ஒன்றுக்கு ஒன்று தரும் ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும் என்பதில் சீனா உறுதியாக உள்ளது. சொந்த நாட்டின் வளர்ச்சி மூலம் அண்டை நாடுகளுக்கும் நலன்களை வழங்க விரும்புகின்றது என்று 2013ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் போஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.

சீன சமூக அறிவியல் கழகம் அண்மையில் வெளியிட்ட சீனாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவின் வளர்ச்சி பற்றிய அறிக்கையில், 2021ஆம் ஆண்டில் கொவிட்-19 நோய் தொடர்ந்து பரவி வரும் தாக்கத்தில், நோய் தடுப்புக்கான ஒத்துழைப்பானது தொடர்ந்து சீனா மற்றும் அதன் அண்டை நாடுகளின் முக்கியத் தேர்வாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

தவிரவும், ஆசியான் பத்து பிளஸ் 3, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, போஆவ் ஆசிய மன்றம் உள்ளிட்ட கட்டுக்கோப்புகளுக்குள், சீனா மேலும் பரந்த அளவில் புதிய ஒத்துழைப்பு மேடையை உருவாக்கி, பிராந்திய ஒத்துழைப்பை முன்னேற்றி வருகின்றது.