ஹாங்காங் தொடர்பான அமெரிக்க அறிக்கை
2021-04-18 17:03:26

அமெரிக்க அரசு 16ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஹாங்காங்கில் கலவரங்களை உருவாக்கி, நாட்டை பிளவுபடுத்த முயற்சித்த குற்றத்திற்காக, ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நீதி மன்றம் அளித்த நியாயமான தீர்ப்பு பற்றி திரித்து பேசப்பட்டு, தொடர்புடைய குற்றவாளிகளைச் சீனா விடுவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

2019 ஆகஸ்டு 18ஆம் நாள், இந்த குற்றவாளிகள், ஹாங்காங்கில், போக்குவரத்தைத் தடைசெய்தல், தீ வைப்பு, காவற்துறையினர் மீது தாக்குதல், குடிமக்களை முற்றுகையிடுதல் போன்றவற்றை மேற்கொண்டனர். இவை அமைதியான கூட்டமல்ல.

அமைதி, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவை மனித குலத்தின் பொது மதிப்பாகும். இதை முடிவு செய்யும் உரிமை அமெரிக்கா என்ற ஒரே நாட்டுக்கு மட்டும் இல்லை. அமெரிக்காவின் மதிப்புகள், சர்வதேச மதிப்புகளாகும் என்பதையும் அமெரிக்க விதிகள், சர்வதேச விதிகளாகும் என்பதையும் பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

தற்போது ஹாங்காங்கில் அமைதி மீட்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீதான நீதி விசாரணைகள் ஒழுங்காக மேற்கொள்ளப்படும்.