காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது புவியமைவு அரசியலுக்கான வசதி அல்ல!
2021-04-18 17:11:40

காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது முழு மனித குலத்தின் பொது இலட்சியமாகும். இதனைப் புவியமைவு அரசியல், இதர நாட்டைத் தாக்குதல் மற்றும் வர்த்தகத் தடை உள்ளிட்டவற்றுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அண்மையில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் தலைவர்களுடன் நடத்திய காணொலி உச்சிமாநாட்டில் சுட்டிக்காட்டினார்.

கடந்த சில ஆண்டுகளாக, ஒரு தரப்புவாதம், நோய் தொற்றை அரசியல் மயமாக்குவது உள்ளிட்ட பல அறிவுப்பூர்வமற்ற செயல்கள் உலகிற்கு மிக அதிக முரண்பாடுகளையும் சிக்கலான நிலைமையையும் கொண்டு வந்துள்ளன. இதன் விளைவாக சீன-ஐரோப்பிய உறவிலும் உறுதியற்ற காரணிகள் தோன்றின.

இச்சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரு முக்கிய நாடுகளான பிரான்ஸும், ஜெர்மனியும் சீனாவுடன் காலநிலை துறை ஒத்துழைப்பு பற்றி விவாதித்து ஒருமித்த கருத்துக்களை எட்டுவது, சீனாவுடனான ஒத்துழைப்பில் ஐரோப்பா தொடர்ந்து கவனம் செலுத்துவதைக் காட்டுகின்றது. சித்தாந்தம் மற்றும் அரசியல் வேறுப்பாட்டைப் புறக்கணித்து பொது நலன்களுக்காக முயற்சி மேற்கொள்ளும் வாய்ப்புகளானது, உலகில் நிலவும் கவலைகளைக் குறிப்பிட்ட அளவில் தணிவு செய்யும் என்று நம்புகின்றோம்.