உள்நாட்டுக் கவனத்தைத் திசைதிருப்பும் ஜப்பானிய அரசியல்வாதிகள்
2021-04-18 16:55:24

அமெரிக்க-ஜப்பான் தலைவர்கள் உச்சிமாநாட்டில் சீனாவைத் தடுத்துக் கட்டுப்படுத்துவது தொடர்பான அம்சங்களைக் கொண்ட ஒரு கூட்டறிக்கை ஏப்ரல் 16ஆம் நாள் வெளியிடப்பட்டது. இது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவுடனான வெளியுறவை மேம்படுத்த விரும்பும் ஜப்பான், திடீரென தன் செயலை மாற்றியது ஏன் என்ற கேள்வி எழுந்தது.

2020ஆம் ஆண்டில் ஜப்பானின் பொருளாதார அதிகரிப்பு விகிதம் பூஜியத்துக்குக் கீழ் 4.83 விழுக்காடாகச் சரிந்தது. நோய் பரவல் தடுப்பிலும் பொருளாதார மீட்சியிலும் தோல்வி அடைந்த பின், சுக்கயோஷிப்பிடெ தலைமையிலான ஜப்பான் அமைச்சரவை, உள்நாட்டு முரண்பாடுகளின் மீதான பொது மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப விரும்புகிறது. தற்போதைய சீனா முன்பை விட பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் வகையில், பிரதேச நலன்களை விலை கொடுப்பதன் மூலம், சீனாவைத் தடுத்துக் கட்டுப்படுத்தும் ஜப்பானின் முயற்சி, நனவாக்க முடியாத கடமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.