போ ஆவ் ஆசிய மன்றத்தில் சீனாவின் பங்கு
2021-04-19 19:58:34

உலகப் பொருளாதாரத்தில் ஆசியாவின் பங்கு கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளில் இருந்த சுமார் 30 விழுக்காட்டிலிருந்து தற்போது 41 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதேவேளையில், உலகளவில் ஆசியாவின் செல்வாக்கும் தகுநிலையும் அதிகரித்து வருகின்றது. இச்சூழலில் போ ஆவ் ஆசிய மன்றம் தனது 20ஆம் ஆண்டு நிறைவை வரவேற்கின்றது.

கொவைட்-19 நோயுடன் போராடி, பொருளாதார மீட்சியை நனவாக்குவதில் சீனா ஆசிய நாடுகளில் முன்னணியில் உள்ளது. உலக மயமாக்கத்தை வரவேற்கும் சீனா வெளிநாட்டுத் திறப்பில் ஊன்றி நின்று, பிராந்தியப் பொருளாதாரத்தின் கூட்டு வளர்ச்சிக்கு மாபெரும் பங்கு ஆற்றி வருகின்றது.

போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டத்தின் மூலம், ஆசியா மற்றும் உலக வளர்ச்சிக்குத் துணை புரியும் சீனாவின் புதிய அறிவுதிறமையையும் புதிய வாய்ப்புகளையும் பெறுவதை உலகம் எதிர்ப்பார்க்கின்றது.