ஜப்பானிய அரசு தவறான செயலை நிறுத்த வேண்டும்!
2021-04-21 09:32:36

அணு கழிவு நீர் வெளியேற்ற விவகாரத்தைத் தொடர்ந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் குற்றச்சாட்டு எழுந்த போதிலும், ஜப்பான் அரசு தவறான சிந்தனையைக் கைவிடவில்லை. உண்மையிலே, கடலில் வெளியேற்றாமல், மேலும் பாதுகாப்பான அணு கழிவு நீர் சமாளிப்பு வழிமுறைகளை ஜப்பான் பயன்படுத்த முடியும். ஆனால், பூமிக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வழிமுறையைத் ஜப்பான் தேர்ந்தெடுத்துள்ளது. அதற்கான முக்கிய காரணம் செலவுக் குறைவு என்பது தான்!

ஜப்பான் செலவுக் குறைந்த ஒரு திட்டத்தை ஒரு சார்பாகத் தேர்ந்தெடுத்து, மிகப் பெரிய சுற்றுச்சூழல் இடர்பாட்டை உலகிற்கு ஏற்படுத்துகிறது. ஜப்பானின் இம்முடிவு ஏற்படுத்தும் பாதிப்பை பன்னாடுகளும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஜப்பான் நிறைவேற்றியுள்ள தீர்மானம் மிகவும் பொறுப்பின்மை மற்றும் நாகரிகமற்ற தன்மையைக் காட்டுகிறது. ஜப்பான் தனது தவறான தீர்மானத்தை மீண்டும் கருத்தில் கொண்டு, திரும்ப பெற வேண்டும்!