ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் சீனாவின் பங்குகள்
2021-04-21 16:56:52

கடந்த 7 ஆண்டுகள் கட்டுமானத்தின் மூலம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, மனிதகுலத்துக்குக் கூட்டு வெற்றி மற்றும் பகிர்வு, வளர்ச்சி மற்றும் செழிப்பு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பரஸ்பர மதிப்பு ஆகியவற்றின் எதிர்காலத்தை உருவாக்க உதவியளித்து வருகின்றது.

கரோனா வைரஸ் பரவி வந்த காலத்தில், சீன-ஐரோப்பிய தொடர் வண்டிகள், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுக்குப் தொற்றுநோய் தடுப்பு பொருட்களை அதிக அளவு அனுப்பியுள்ளன. இந்தோனேசியா, பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, பாகிஸ்தான், துருக்கி முதலிய நாடுகளுடன் சீனத் தொழில் நிறுவனங்கள், கூட்டாக தடுப்பூசி உற்பத்தியை செய்கின்றன.

அதே வேளையில், அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, 2020ஆம் ஆண்டில் சீனா மற்றும் நெடுகிலுள்ள நாடுகளின் சரக்கு வர்த்தகத் தொகை, கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.7 விழுக்காடு அதிகமாகும். சீனத் தொழில் நிறுவனங்கள், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் 58 நெடுகிலுள்ள நாடுகளில் நிதி அல்லாத நேரடி முதலீடு, கடந்த ஆண்டை விட 18.3 விழுக்காடு அதிகமாகும்.

2030ஆம் ஆண்டில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, உலகில் 76 இலட்சம் மக்களைத் தீவிர வறுமையிலிருந்து மீட்க உதவியளிக்கக் கூடும் என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.