உடன்படிக்கையை முறித்து கொள்ளும் ஆஸ்திரேலியா
2021-04-22 20:37:53

சீனாவுடன் ஆஸ்திரேலியாவின் விக்டோரிய மாநில அரசு உருவாக்கிய ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை குறிப்பாணையையும் கட்டுக்கோப்பு உடன்படிக்கையையும் முறித்து கொள்வதென அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் 21ஆம் நாள் அறிவித்தார்.

சீனாவுடனான உடன்படிக்கையை நிறுத்தும் இத்தகைய நேர்மையற்ற நடவடிக்கையின் மூலம் அமெரிக்காவுக்கு விசுவாசத்தைக் காட்ட ஆஸ்திரேலியா விரும்புகின்றது. ஆனால், இதிலிருந்து அது உண்மையாக நலன் பெற முடியுமா? ஆஸ்திரேலியா தனது மதிப்பை கூடுதலாக மதிப்பிடுகிறது.

மோரிசன் அரசின் சீனக் கொள்கையால் ஆஸ்திரேலியா ஒரு நிலையான சந்தையை இழந்து விடும் என்று அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அதிகாரி டோனி கேவன் கூறினார்.