தைவான் விவகாரத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு
2021-04-24 19:14:01

2021ஆம் ஆண்டு அமெரிக்காவின் வியூகப் போட்டி மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவையின் வெளிநாட்டு உறவுகள் குழு ஏப்ரல் 21-ஆம் நாள் பரிசீலனை மூலம் ஏற்றுக்கொண்டது.

200க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட இம்மசோதாவில், சீனாவின் தைவான் தொடர்பாக குறிப்பிடப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது. அமெரிக்கா தைவானுக்கு இராணுவ ஆயுதங்களை விற்பனை செய்வது, தைவான் சர்வதேச நிறுவனங்களில் பங்கெடுப்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா இம்மசாதோவில் வெளிப்படையாக தெரிவிக்கின்றது.

இது, சீனாவின் மைய நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்களில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மோசமான ஆத்திரமூட்டும் செயலாகும்.

தைவான் விவகாரத்தில், சீன அரசு எந்த சமரசத்துக்கும் வராது. இருப்பினும், அமெரிக்காவின் சில அரசியலாளர்கள் தொடர்ந்து கனவு கண்டு, தவறான தீர்ப்பு கொடுத்து வருகின்றனர்.

சீன விவகாரங்கள், சீனர்களால் முடிவு எடுக்கப்பட வேண்டும். தைவான் விவகாரம், சீனாவின் உள்விவகாரத்தைச் சேர்ந்ததாகும். வெளிப்புறத்திலிருந்து வரும் தலையீடுகளை அனுமதிக்க முடியாது. சீனாவின் ஒருமைப்பாடு இறுதியில் வெறஅறி பெறும். எந்த பிற சக்திகளும் இதனைத் தடுத்து நிறுத்த முடியாது.