தடுப்பூசி விவகாரத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் தேசியவாதம்
2021-04-26 18:57:37

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயால் ஏற்பட்ட உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகின்றது. இந்த சூழலில், தடுப்பூசி விவகாரத்தில் ஊன்றி நின்று வரும் தேசியவாதிகளின் மனச்சாட்சி விழித்துக் கொள்ளமா?

இந்தியாவில் க ஒரே நாளில் புதிதாக நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 4 நாட்களாக 3இலட்சத்தைத் தாண்டி வருகின்றது. மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பற்றாக்குறை பிரச்சினை எழுந்துள்ளது.

சர்வதேச சமூகத்தின் நிர்பந்தத்துக்கு அடிபணியும் நிலைமையில், தடுப்பூசித் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை வழங்கும் என்று அமெரிக்க அரசு ஏப்ரல் 25-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அமெரிக்காவின் இம்முடிவுக்கு இந்திய இணைய பயன்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.. அமெரிக்க அரசின் சுயநலன் மற்றும் இரக்கமற்ற தன்மையை அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஒரு மாதத்துக்கு முன், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில், இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசித் தயாரிப்புக்கு நிதி அளிக்க விரும்புவதாகவும், தடுப்பூசிகளை வேறு நாடுகளுக்கு வினியோகம் செய்ய விரும்புவதாகவும் அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஆனால், தொற்று நோய் இந்தியாவில் தீவிரமாகிய பிறகு, தனது நாட்டில் பொது மக்களுக்கு தடுப்பூசிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை காரணமாக கொண்டு, தடுப்பூசிக்கு தேவையான மூலப்பொருட்கள் ஏற்றுமதி தடையை நீக்க இந்தியா முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா 22-ஆம் நாள் வரை மறுத்தது.

உலகளவில் முக்கிய தடுப்பூசி தயாரிப்பு இடங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கின்றது. இருப்பினும் அந்நாட்டில் 8.6விழுக்காட்டினர்களுக்கு மட்டும் ஒரு முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விகிதம் 41விழுக்காடு, பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விதிகம் 50விழுக்காடு, இஸ்ரேலில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விகிதம் 61விழுக்காடாகும்.

டியூக் பல்கலைக்கழகத்தின் முழு உலக சுகாதாரப் புத்தாக்க மையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இவ்வாண்டின் ஜுலை திங்கள் வரை, அமெரிக்காவில் 30கோடி தடுப்பூசிகள் இருக்கும். அப்போது, உண்மையான தேவையை விட வினியோகம் அளவுக்கு மீறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.