பிற நாட்டு உள்விவகாரங்களில் தலையீட்டு சிக்கலை ஏற்படுத்தி வரும் அமெரிக்கா
2021-04-27 21:11:15

அமெரிக்காவும் நேட்டோ அமைப்பும் ஆப்கானிஸ்தானிலுள்ள பல தளங்களில் இருந்து படையினரை வெளியேற்ற தொடங்கியுள்ளன என்று ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க ராணுவ அதிகாரி சமீபத்தில் தெரிவித்தார். திட்டப்படி, இவ்வாண்டு செப்டம்பர் 11ஆம் நாளுக்கு முன்பு ராணுவ படையினர் வெளியேற்ற உள்ளனர். ஒரு 20 ஆண்டுக்காலமாக நீடித்த போர் எளிதில் முற்றுப் புள்ளிக்கு வைக்கப்படும் என்பதை அது குறிக்கிறது.

20ஆம் ஆண்டுகளுக்கு முன்பு, பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில், அமெரிக்கா ஆப்கானில் போர் தொடுத்தது. இதன் காரணமாக, கடும் அதிர்ச்சி தந்துள்ள மனித நேய பேரிடர் ஏற்பட்டது. 2001ஆம் ஆண்டு முதல், ஆப்கான் போரில் மொத்தம்  கிட்டத்தட்ட 2 லட்சத்து 41ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அவர்களில் 71 ஆயிரம் அப்பாவி மக்கள் உள்ளனர். அந்நாட்டுத் தலைநகர் காப்பூரில் வெடிப்பு, பயங்கரவாத தாக்குதல்  அடிக்கடி நடந்த்து வழக்கமாகியுள்ளது. உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்கா தலையீட்டுக் கொள்கையைப் பின்பற்றி, உலகிற்கு தீங்கு விளைவித்து வரும் செயல்பாடுகளில் ஆப்கான் போரும் ஒன்றாகும் மட்டுமே. அதை தவிர்த்து, ஈராக், சிரியா, லிபியா போன்ற பல   நாடுகளில் அமெரிக்கா ராணுவ ரீதியில் தலையீடு செய்து வந்ததால்,   அரசியல் கொந்தளிப்பு, சமூக வளர்ச்சி மற்றும்  மக்களின் வாழ்க்கைக்கு பாதிப்பு ஆகியவை காணப்பட்டுள்ளன.  ஜனநாயகம் என்ற பெயரில் செயல்பட்டுள்ள அமெரிக்கா உண்மையிலேயே  பிற நாட்டு உள்விவகாரங்களில் தலையீட்டு வருகிறது. மனித உரிமை என்ற பெயரில் செயல்பட்டு அமெரிக்கா மனித நேய பேரிடரை ஏற்படுத்தியது. உலகின் நிலைப்புத்தன்மையைச் சீர்குலைத்து சிக்கலை உருவாக்கிய நாடு அமெரிக்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது.