சீனாவுடனான உறவில் தவறான கோட்பாட்டில் சிக்கியுள்ள பைடன் அரசு
2021-04-29 21:02:58

அமெரிக்க அரசுத் தலைவராக பதவி ஏற்ற பின் 100ஆவது நாளை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்திய ஜோன் பைடன், சீனாவுடனான உறவு பற்றி குறிப்பிடுகையில் கடினமான மனப்பான்மையை வெளிக்காட்டினார். இந்தோ-பசிபிக் பிரதேசத்தில் வலிமையான இராணுவம் இருப்பதை அமெரிக்கா நிலைநிறுத்தும் என்று தெரிவித்தார்.

போட்டி, ஒத்துழைப்பு, எதிர்ப்பு ஆகியவை தான், சீனாவுடனான உறவைக் கையாள்வதில் பைடன் அரசு பலமுறை குறிப்பிட்டுள்ள கோட்பாடு.

பொதுவாக, பைடன் அரசு சீனாவை மிகப் பெரிய போட்டியாளராகக் கருதி வருகின்றது. சீனா மீதுகொண்டுள்ள எதிர்ப்புக் கொள்கைகளை, டிரம்ப் அரசின்போது இருந்ததை விட பைடன் அரசு மேலும் வலிமையாக்கி வருகிறது.

தற்போதைய கொந்தளிப்பான உலகில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எதிர்ப்புக்கு மாறாக, இரு நாட்டு ஒத்துழைப்பு முக்கியமானதாகும்.

அமெரிக்காவைத் தாண்டுவது, சீனாவின் வளர்ச்சி இலக்கு அல்ல. தன்னை மேலும் நன்றாக வலுப்படுத்தி தங்கள் நாட்டு பொது மக்கள் இனிமையாக வாழ் வைப்பது தான் சீனாவின் நோக்கமாகும். ஒரு நாட்டுக்கு எதிராக அறைகூவலை விடுப்பதில் சீனாவுக்கு ஆர்வம் இல்லை. அமெரிக்கா எதிர்ப்பு அளவு தீவிரமாகும் போக்கை தடுத்து, சீனாவுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு சீரான போட்டி நடத்தும் வழிக்குத்திரும்ப வேண்டியது அவசியமானது.