சின்ஜியாங் விவகாரத்தில் மேற்கத்திய சதிகாரர்களின் பாசாங்குத்தனான முகம்
2021-04-30 21:02:53

சீன எதிர்ப்பில் ஈடுபட்டு வரும் மேற்கத்திய அமைப்புகள் மற்றும் நபர்கள், சின்ஜியாங்கில் கட்டாய உழைப்பு என்ற அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். ஏப்ரல் 21ஆம் நாள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையின் வெளிநாட்டு உறவுகள் குழு ஏற்றுக்கொண்ட மசோதா ஒன்றில், சின்ஜியாங்கில் கட்டாய உழைப்பு என்று மீண்டும் கூறப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்கள் மற்றுன் தனிநபர்கள் மீது தடை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மதிப்பு தொடர் சங்கிலி சார்ந்த ஒத்துழைப்பில் சின்ஜியாங்கின் பங்களிப்பைச் சீர்குலைத்து, சீன நிறுவனங்களின் சர்வதேச போட்டித் திறனைக் குறைப்பதோடு, சின்ஜியாங் மூலம் சீன வளர்ச்சியைத் தடுப்பது  அவர்களின் உண்மையான நோக்கமாகும்.  அவர்களின் இந்த இரகசியம் சர்வதேச சமூகத்தில் பொதுவாக அறிந்ததே.

சின்ஜியாங் மக்களின் மனித உரிமையைப் பேணிக்காக்கும் பெயரில், சீனாவுக்கு எதிரான மேற்கத்திய சக்திகள், சின்ஜியாங்கின் வளர்ச்சி மற்றும் மனித உரிமையைச் சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன.  இதற்கு மாறாக வெளியாகும் உண்மைகளும் சர்வதேச சமூகத்தின் நேர்மையான  குரல்களும் அவர்களின் மற்றொரு பாசாங்குத்தனமான முகத்தை வெளிக்காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.