விண்வெளியில் மனிதர்களுக்கான கூட்டு வீடு
2021-04-30 09:16:08

சீன விண்வெளி நிலையத்தின் சீனா, தியன் ஹே என்ற மைய கலனை 29ஆம் நாள் திட்டவட்டமான சுற்று வட்ட பாதையில் வெற்றிகரமாகச் செலுத்தியது.

விண்வெளியில் நிர்ந்தர நிலையத்தை உருவாக்கும் பணியில் சீனா முக்கிய முன்னேற்றமடைந்துள்ளது. கடந்த சில பத்து ஆண்டுகளில் பாதையில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையம் 2024 முதல் 2028ஆம் ஆண்டுக்குள் குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்தப்படக்கூடும். இதனால், அப்போது சீனாவின் விண்வெளி நிலையம், விண்வெளியில் மனிதர்களின் கூட்டு வீடாக மாறும்.

சீனா, தன்னுடைய விண்வெளி நிலையத்தை, சர்வதேச சமூகத்திற்கான  வெளித்திறப்பான அறிவியல் தொழில் நுட்பப் பரிமாற்ற மேடையாக கட்டியமைக்கப் பாடுபட்டு வருகின்றது.

சீன விண்வெளி நிலையம், ஐ.நாவின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் திறக்கப்படும். இது உலக வரலாற்றில் முதல் முறையாகும்.

தற்போது, 17 நாடுகள் மற்றும் 23 நிறுவனங்களைச் சேர்ந்த 9 திட்டப்பணிகள் முன்னேறி வருகின்றன.

இதனிடையில் சீனாவின் விண்வெளித் திட்டப் பணியானது, ஐ.நாவின் 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி திட்டத்துக்குப் பங்காற்றும் என்று ஐ.நாவின் விண்வெளி பணியகத்தின் தலைவர் தி பிப்போ கருத்து தெரிவித்துள்ளார்.