அரசியல்வாதிகளின் தலைமையில் அமெரிக்கா வீழ்ச்சியடையும்
2021-05-04 18:26:17

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் 2ஆம் நாள் அமெரிக்க செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த போது வெளிநாடுகளில் சீனா ஆதிக்கத்துடன் செயல்பட்டு வருகிறது என்று கூறினார். சீன வளர்ச்சியைத் தடுப்பதற்குப் பதிலாக சர்வதேச ஒழுங்கைப் பேணிக்காப்பது தான் அமெரிக்காவின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார். ஆனால், அமெரிக்காவின் நடவடிக்கைகள் மீண்டும் அதன் பொய் முகத்தை அம்பலப்படுத்தின.

கடந்த பல பத்து ஆண்டுகளில், ஆயுத அச்சுறுத்தல்கள், அரசியல் தனிமைப்படுத்தல், பொருளாதார மற்றும் தொழில்நுட்பத் தடை ஆகிய முறைகளில் அமெரிக்கா மேலாதிக்கவாதத்துடன் தனது நோக்கத்தை நனவாக்க முயன்று வருகின்றது. ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, ஈரான், கியூபா, வெனிசூலா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் அமெரிக்காவினால் பாதிப்படைத்துள்ளன. தவிர, உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் செயல்பாட்டையும் அமெரிக்கா சீர்குலைத்து வருகின்றது. அமெரிக்காவின் கூட்டணி நாடுகளும் அதன் நிர்ப்பந்தத்தையும் அச்சுறுத்தலையும் சந்திக்கும்.

உலகத்தைக் கட்டுப்படுத்த முயன்று வரும் அமெரிக்காவின் நோக்கத்தை இவை கோடிட்டுக்காட்டியுள்ளது. வலுக்கட்டாயமான தூதாண்மையில் ஈடுபடும் அமெரிக்க அரசியல்வாதிகள் வீழ்ச்சி அடையும் பாதைக்கு அமெரிக்காவுக்கு வழிகாட்டியுள்ளனர்.