தவறுகளில் அமெரிகாவின் ஆவேசம்
2021-05-05 17:40:10

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் 3ஆம் நாள் லண்டனில் ஜி7 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டணி நாடுகளுடன் இணைந்து, சீனா மற்றும் ரஷியா மீது கட்டுபாடு மேற்கொள்வது என்பது அவரது முக்கிய நோக்கமாகும். இதில் பைடன் அரசின் தூதாண்மை கொள்கை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பாவைச் சேர்ந்த பாரம்பரிய கூட்டணி நாடுகளிடம் நல்லெண்ணத்தை அமெரிக்கா தொடர்ந்து காட்டி வருகிறது. சீன வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் அவை முக்கிய பங்காற்ற வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது. அதோடு உலகளவில் நெடுநோக்கு வளங்களின் ஒருங்கிணைப்பையும் அமெரிக்கா விரைவுபடுத்தி வருகின்றது. ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி, சீனா மீது குறிவைப்பது என்ற அமெரிக்காவின் புதிய இலக்கை சில நாட்களுக்கு முன், பிளிங்கன் தெரிவுப்படுத்தினார்.

மனித உரிமைகள், ஜனநாயகம், சுதந்திரம் ஆகிய உருமறைப்புகளில், அமெரிக்கா கூட்டணி நாடுகளுடன் இணைந்து, ஹாங்காங், தைவான், திபெத் ஆகிய பிரச்சினைகளை பயன்படுத்தி, சீனா மீது நிர்ப்பந்தம் திணிக்க முயன்று வருகின்றது.

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி அல்ஃபிரட் கிசிங்கர் கூறுகையில், சீனாவுடனான நெருக்கடி உறவு, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகிற்கும் பெரும் பிரச்சினையாகும். இப்பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், முழு உலகமும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் என்றார்.