சீனச் சந்தை வாய்ப்பை வெளிப்படுத்தும் மே தின விடுமுறை நுகர்வு
2021-05-06 20:41:21

இவ்வாண்டு மே தின விடுமுறையில் சீன நுகர்வுச் சந்தையின் விறுவிறுப்பு உலகிற்கு வியப்பு தருகிறது. ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தனது செய்தியில், மே தின விடுமுறை வரும் முன், சீனாவின் உள்நாட்டு விமானப் பயணச் சீட்டுகளும் பூங்காக்களின் நுழைவுச் சீட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இது, நோய் தொற்றுக்குப் பின் சீனாவின் மீட்சி வேகம் அதிகரித்து வருவதை காட்டுகிறது என்று தெரிவித்தது.

மே தின விடுமுறையில் காணப்பட்ட விறுவிறுப்பு, சீனாவின் நோய் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியைச் சோதித்ததோடு, சீன நுகர்வுச் சந்தையின் தொடர்ச்சியான மீட்சியை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு, சீன அரசு மேற்கொண்டுள்ள உள்நாட்டுத் தேவை மற்றும் நுகர்வு ஊக்குவிப்பு கொள்கைகள், குடிமக்களின் வருமானம் உயர்வு, நுகர்வுச் சூழல் மேம்பாடு ஆகியவை பங்களித்துள்ளன.

நுகர்வு நிலை உயர்வு, புதிய நுகர்வு மாதிரி உருவாக்கம், பாரம்பரிய முறை இணையவழியுடன் இணைப்பு ஆகியவற்றின் மூலம் சீனாவின் நுகர்வு ஆற்றல் மேலும் தட்டியெழுப்பப்பட்டு, முழு உலகிற்கும் வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது.