சர்வதேச ஒழுங்கைப் பின்பற்ற வேண்டிய அமெரிக்கா
2021-05-07 20:02:51

ஏழு நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் அண்மையில் இலண்டனில் முடிவடைந்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளின்கன் இக்கூட்டத்தில் கூறுகையில், சீனாவைக் கட்டுப்படுத்துவது, அமெரிக்காவின் நோக்கம் அல்ல. விதிமுறையை அடிப்படையாக்க கொண்ட சர்வதேச ஒழுங்கைப் பேணிக்காப்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாகும் என்றார். எவ்வளவு அபத்தமாக உள்ளது!

இவ்வாண்டு ஜனவரி திங்கள் அமெரிக்காவில் புதிய அரசு பதவி ஏற்ற பிறகு, விதிமுறை மற்றும் சர்வதேச ஒழுங்கைப் பயன்படுத்தி கருத்துக்களைப் பரப்பி வருகிறது. ஆனால், அமெரிக்க அரசு கூறிவரும் பலதரப்புவாதம், கூட்டணி நாடுகளை இணைக்கும் குழு அரசியலாகும். அமெரிக்கா தலைமையிலான ஆதிக்கம் கொண்ட சர்வதேச ஒழுங்கைப் பிற நாடுகள் பின்பற்ற அமெரிக்கா முயன்று வருகிறது.

பிற நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடுவது, சர்வதேச சட்டத்தை மீறி கலவரம் மற்றும் போர் தோடுப்பது, சர்வதேசக் கடமைகளை நிறைவேற்ற மறுப்பது உள்ளிட்ட விஷயங்களைச் செய்யும் அமெரிக்காவுக்கு, சர்வதேச ஒழுங்கு பற்றி கருத்து தெரிவிக்கும் தகுதி உள்ளதா?

உலகத்திலே ஒரே ஒரு சர்வதேச ஒழுங்கு உள்ளது. இது தான் ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச ஒழுங்காகும். உலகத்திலே ஒரே ஒரு விதிமுறை உள்ளது. இது ஐ.நா சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடு. விதிமுறையைப் பயன்படுத்தி பிற நாடுகளைக் கட்டுப்படுத்தும் அமெரிக்கா உள்ளிட்ட சில மேலை நாடுகள் தான், சர்வதேச ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும்.