அமெரிக்க அரசியல்வாதிகள் சின்ஜியாங்கிலுள்ள உண்மைகளை கவனிக்க வேண்டும்!
2021-05-08 17:24:27

சின்ஜியாங் தொடர்பான பொய் மற்றும் உண்மைக்கு இடையிலான போட்டி பற்றி, அண்மையில் 2 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஒன்று, சின்ஜியாங் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை கருத்து கேட்டறிதல் கூட்டம் என கூறப்படும் கூட்டத்தை நடத்தியது. இதில் கலந்து கொண்டவர்களில் சிலர் சின்ஜியாங் பிரிவினைவாதிகள், வேறு சிலர் சின்ஜியாங்கில் நடத்தப்படும் சீன கொள்கைக்கு எதிரான மனம் கொண்டவர்கள் ஆவர்.

மற்றொரு நிகழ்ச்சி, அமெரிக்காவிலுள்ள சீன தூதரகம் மற்றும் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேச அரசு கூட்டாக நடத்திய “சின்ஜியாங் ஓர் எழில்மிக்க இடம்” எனும் காணொலிக் கூட்டமாகும். சின்ஜியாங்கைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் தமது சொந்த அனுபவங்களின்படி, இதில் கலந்து கொண்ட அமெரிக்கர்களுடன் பரிமாற்றம் மேற்கொண்டனர்.

மேலும், சின்ஜியாங்கின் வளர்ச்சியை உண்மைகளும் காட்ட முடியும். சீன அரசின் சரியான ஆட்சியுடன், சின்ஜியாங்கில் கடந்த 4 ஆண்டுகளில் பயங்கரவாதச் சம்பவங்கள் ஒன்றும் நிகழவில்லை. பொருளாதாரம் மற்றும் சமூகம் நிதானமாக வளர்ந்து வருகிறது. 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை, சின்ஜியாங் பிரதேசத்தில் மொத்த உற்பத்தி மதிப்பு 7.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு, இது 3.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது, முழு சீனாவில் இருந்ததை விட 1.1 விழுக்காடு அதிகம்.

அமெரிக்க அரசியல்வாதிகள் சின்ஜியாங்கின் உண்மைகளை கவனியுங்கள். சின்ஜியாங்கின் நிதானத்தைச் சீர்குலைத்து, சீனாவின் வளர்ச்சியைத் தடுக்கும் உங்கள் கருத்து கடைசியில் கனவாக மாறுவது உறுதி.