சட்ட ஒழுங்கை மீறிய அமெரிக்க அரசியலாளர்கள்
2021-05-09 16:03:09

ஹாங்காங் சமூக ஒழுங்கைச் சீர்குலைத்த குற்றவாளிகளுக்கு சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேச நீதி மன்றம் தீர்ப்பு அளித்தது. கடந்த சில நாட்களில் அமெரிக்க அரசியலாளர்கள் சிலர் இது குறித்த அவதூறு கூறி, இந்த குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் இக்கோரிக்கை கேலிக்குரியதாக உள்ளது. விதியைப் பின்பற்றி சர்வதேச ஒழுங்கை பேணிக்காக்க வேண்டுகோள் விடுத்த இந்த அரசியலாளர்கள், சர்வதேச சட்டத்தையும், சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டையும் இந்த கோரிக்கையின் மூலம் தற்போது சீர்குலைக்கின்றனர். இது சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் வேறுபாட்டை ஏற்படுத்துவதாகும். மேலும் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யும் அவர்களின் நோக்கத்தை வெளிகாட்டுகிறது.

ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேச நீதி மன்றம் இந்த குற்றவாளிகளை நேர்மையாக விசாரணை செய்து, சரியான தண்டனை வழங்கியது. இது ஹாங்காங்கின் சட்ட ஒழுங்கை வெளிக்காட்டி, பொது மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்தது. இந்த விசாரணையிலும் நீதி மன்ற தீர்ப்பிலும் தலையீடு செய்த அமெரிக்க அரசியலாளர்கள், ஹாங்காங் சட்ட ஒழுங்கை மீறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.