சீனாவின் மக்கள் தொகை பங்குலாபம்
2021-05-11 19:36:16

7ஆவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கிய தரவுகளை சீன அரசு 11ஆம் நாள் வெளியிட்டது. 2020ஆம் ஆண்டு சீனாவின் மொத்த மக்கள் தொகை, 141 கோடியை எட்டியுள்ளது. இது, உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 18 விழுக்காடு ஆகும். உலகில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதோடு, இத்தரவுகளின் படி, சீனாவின் மக்கள் தொகை பங்குலாபம், திறமைசாலி பங்குலாபம் நோக்கி வேகமாக மாறி வருகிறது. சீனாவின் வளர்ச்சிக்கான ஆற்றலை இது தொடர்ந்து வலுப்படுத்தும்.

சீன மக்கள் தொகை கட்டமைப்பின் மாற்றத்தில் ஏற்பட்டுள்ள சிறப்புகள் இந்த கணக்கெடுப்பில் வெளியிடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, உழைப்பாற்றலுடைய வயதினரில், சீனியர் பள்ளி மற்றும் இதற்கு மேலான கல்வியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை, 38.5 கோடியை எட்டி, 43.79 விழுக்காடு ஆகும். இது 2010ஆம் ஆண்டில் இருந்ததை விட 12.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், சீனாவின் நகரங்களில் பொதுவாக தங்கியிருக்கும் மக்களின் எண்ணிக்கை, 23.6 கோடியை அதிகரித்துள்ளது. அதோடு, இக்காலக் கட்டத்தில் சீனாவில் வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை, 37.6 கோடியை எட்டி, சுமார் 70 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மேற்கூறிய போக்கு, உயர் தர வளர்ச்சியில் முன்னேறி வரும் சீனாவின் வரலாற்று போக்கிற்கு பொருந்தியதாக இருக்கிறது. சீனாவின் மக்கள் தொகை பங்குலாபம், திறமைசாலி பங்குலாபம் நோக்கி மாறி வருவதுடன், சீனாவின் மக்கள் தொகை மூலவள மேம்பாடு மேலும் வெளிக்கொணரப்படும்.