சீன சந்தை முழு உலகத்தின் வாய்ப்பு
2021-05-11 19:04:34

முதல் சீன சர்வதேச நுகர்வு பொருட்களின் கண்காட்சி 10ஆம் நாள் சீனாவின் ஹெய் நான் மாநிலத்தில் முடிவடைந்தது. 4 நாட்களில், 70 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 1505 தொழில் நிறுவனங்களும் 2628 வணிக சின்னங்களும் கலந்துகொண்ட இக்கண்காட்சி 2 இலட்சத்து 40 ஆயிரம் மக்களை ஈர்த்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, பொருளாதார வளர்ச்சிக்கான நுகர்வின் பங்கு இடைவிடாமல் உயர்ந்து வருகின்றது. 2020ஆம் ஆண்டு புதிய ரக கரோனா வைரஸ் பாதித்த நிலைமையில், சீன மக்களின் நுகர்வு செலவு, மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் 54.3 விழுக்காடு வகித்தது.

சீனாவின் நுகர்வு நிலைமை மேம்பட்டு வரும் போக்கு மேலும் தெளிவாக உள்ளது. புள்ளிவிவரங்களின் படி, முதல் நுகர்வுப் பொருட்களின் கண்காட்சியில் உலகில் முதல்முறையாக வெளியிடப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை 550 ஆகும். இப்பொருட்காட்சியில் கலந்துகொண்ட 2628 வணிக சின்னங்களில்  சர்வதேச சின்னங்கள் 51.9 விழுக்காடு வகித்தது.

140 கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய சந்தை, முழு உலகம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.