கோவிட்-19 தொற்று நோயை எதிர்க்க நடைமுறைச் செயல் மேலும் பயனுள்ளதாக உள்ளது
2021-05-12 17:02:29

கோவிட்-19 தொற்று நோய் தடுப்பூசிகளின் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக்கு விலக்குரிமை வழங்குவதற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. என்னும், அமெரிக்காவின் சொல்லுக்கும், உண்மையான நடைமுறைக்கும் வேறுபாடு உள்ளது. அமெரிக்கா இதன் பெயரில் அரசியல் ரீதியிலான விளம்பர நடவடிக்கை மேற்கொள்கின்றது என்ற கூற்று எழுந்துள்ளன.

தடுப்பூசிகளின் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக்கு விலக்குரிமை வழங்குவதற்காக, உலக வர்த்தக அமைப்பின் 164 உறுப்புகள், பேச்சுவார்த்தை மேற்கொண்டு ஒத்த கருத்து எட்டப்பட வேண்டும். இது குறித்து, அமெரிக்கர்கள் கூட இப்பேச்சுவார்த்தைக்கு நீண்டநேரம் தேவை என்று கூறுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் வொண்டர் லேயன் கூறுகையில், அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்புக்கு விலக்குரிமை வழங்குவது மாறாக, தடுப்பூசிகளின் போதிய விநியோகத்தையும் நியாயமான பங்கீட்டையும் உத்தரவமாதம் செய்ய வேண்டியது அவசியமானது என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் தயாரிக்கும் தடுப்பூசிகள் கிட்டதட்ட முற்றிலும் தனது நாட்டுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன. மிகவும் குறைவான தடுப்பூசிகள் மெக்சிகோவுக்கும் கனடாவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதோடு, பல்வகை தடுப்பூசிகளைத் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களை அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க அரசு தடைவிதித்துள்ளது. நற்பண்புகள் கொண்டவரின் தோற்றம், பிசாசின் செயல் இது என்று சிலர் அமெரிக்காவை ஒப்பிட்டு கூறி இணையத்தில் கருத்து வெளியிட்டனர்.

சொற்களை விட, நடைமுறைச் செயல் உலகிற்கு மேலும் தேவை.