சின்ஜியாங் பிரச்சினையில் மேலை நாடுகளின் கேலிக் கூத்து
2021-05-14 10:52:11

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் 12ஆம் நாள் ஐ.நா மேடை மூலம் சீனாவின் சின்ஜியாங் மனித உரிமை நிலைமை பற்றிய கூட்டத்தை நடத்தி, பொய்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்பின. இதில், சீனாவுக்கு எதிரான அந்நாடுகளின் அரசியல் நோக்கமும், சின்ஜியாங் மூலம் சீன வளர்ச்சியை சீர்குலைத்த சூழ்ச்சியும் வெளியிட்டப்பட்டன.

ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் 46ஆவது கூட்டத்தில், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இஸ்லாமிய நாடுகள் உள்ளிட்ட 80க்கும் அதிகமான நாடுகள், சின்ஜியாங் பிரச்சினைகளில் சீனாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தன. அது போன்றே,  சீனா மற்றும் மத்திய ஆசியாவின் 5 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய ஆசிய நாடுகள் சீனாவுக்கு ஆதரவு அளித்துள்ளன.

தற்போது, சின்ஜியாங் பிரச்சினையில், மேலதிக நாடுகள் நியாயமான கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக ஆஸ்திரேலியா, பிரேசில், சிங்கப்பூர், ஸ்வீடன் ஆகிய பல நாடுகளின் செய்தி ஊடகங்கள் கட்டுரைகளை வெளியிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு துறையில் சின்ஜியாங்கின் சாதனைகளை பாராட்டி, அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் அரசியல் சூழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.