சீனா அன்னிய முதலீட்டை ஈர்க்கும் காரணம் என்ன
2021-05-14 19:35:53

சீனா அன்னிய முதலீட்டை ஈர்க்கும் முன்னேற்றப் போக்கு மென்மேலும் விரைவாக தொடர்ந்து வருகிறது என்று ரஷிய செய்தி ஊடகம் ஒன்று அண்மையில் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழுமையான தொழிற்சங்கிலி, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க ஆற்றல், வசதியான சரக்குப் போக்குவரத்து, செழுமையான மனிதவளம் ஆகியவற்றை சீனா கொண்டுள்ள அதே வேளையில், 140 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட நுகர்வு சந்தை, சீனப் பொருளாதாரத்தின் மிக முக்கிய உந்து சக்தியாக மாறியுள்ளது. தவிர, கடந்த சில ஆண்டுகளாக, சீன அரசு சந்தையில் நுழைவதை இடைவிடாமல் விரிவாக்கி, திறப்பு மேடையை உருவாக்கி, அன்னிய முதலீட்டுச் சட்ட அமைப்பு முறையை மேம்படுத்துவது, அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த வணிகச் சூழலை வழங்கியுள்ளது. இவை எல்லாம், சீனா அன்னிய முதலீட்டை வெகுவாக ஈர்க்கும் காரணங்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.