© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஒரு நாட்டைப் பொருத்தவரை அதன் மக்கள் தொகை என்பது பெரும் பலம். எனினும், மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து, வயதானவர்களின் எண்ணிக்கையும் கூடும் போது அந்தப் பலமே பெரும் சுமையாகி விடுகின்றது. இந்த நிலைமையைச் சமாளிக்கச் சூழலுக்கேற்ற புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம். தற்போது சீனா அத்தகு காலகட்டத்தில் இருக்கின்றது. நாட்டிலுள்ள வயதானவர்களின் அதிகரிப்பைப் புதுமையும் கல்வியும் கொண்டு சரி செய்து நாட்டை வளர்ப்படுத்துவதற்கான முற்சியில் அந்நாடு ஈடுபட்டு வருகின்றது.
சீனாவில் அண்மையில் வெளியிடப்பட்ட ஏழாவது சீனத் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. சீனாவில், நாட்டின் பிறப்பு விகிதம் சார்ந்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் அந்நாட்டின் மக்கள் தொகை 141 கோடியை எட்டியுள்ளது. குறிப்பாகக் கடந்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை விகிதம் ஆண்டுக்குச் சராசரியாக 0.53 விழுக்காடு என்ற நிலையில் அதிகரித்து மொத்தமாக 5.38 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பு விகிதம் அதற்கு முந்தைய 10 ஆண்டுகால அதிகரிப்பு விகிதத்தை விட 0.4 விழுக்காடு குறைவு தான் என்றாலும் சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் குறிக்கின்றது.
இதனிடையில் சீனாவில் குறைந்து வரும் குடும்ப அமைப்பு, மக்களின் இடப் பெயர்வு மற்றும் நகரமயமாக்கல் விகித அதிகரிப்பு ஆகியன மற்ற நாடுகளின் போக்கிற்கு ஏற்ப ஒரே மாதிரியாக உள்ளன. அதோடு, சீனாவில் தனிநபரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 10,000 அமெரிக்க டாலர்கள் என்னும் நிலையை எட்டி, நாட்டின் சமூகப் பொருளாதார உயிர்த்துடிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் படி நாட்டில் வயதானவர்கள் மற்றும் உழைக்கும் வயதுடையவர்களின் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் தொகை 5.44 விழுக்காடு அதிகரித்து நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 18.7 சதவீதத்தையும், 15 வதிலிருந்து 59 வயது வரையிலானவர்களின் தொகை 6.79 விழுக்காடு குறைந்து மொத்த மக்கள் தொகையில் 63.35 சதவீதத்தையும் எட்டியுள்ளது. அதுபோன்றே கடந்த பத்தாண்டுகளில் பூஜ்ஜியம் முதல் 14 வயதுடையவர்களின் விகிதம் 1.35 விழுக்காடு அதிகரித்து நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 17.95 விழுக்காடாக உள்ளது. கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி நாட்டிலுள்ளவர்களில் 63.89 விழுக்காட்டினர் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். கடந்த பத்தாண்டுகளோடு ஒப்பிடும் போது இது 14.21 விழுக்காடு அதிகமாகும். மிக முக்கியமாக 49.3கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சீனாவின் வசிப்பிட உரிமையான ‘ஹூகோ’ வைத்திருக்கும் இடமன்றி பிற இடங்களில் வசிக்கின்றனர். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு இலட்சம் பேர்களில் 8ஆயிரத்து 930 நபர்கள் மட்டுமே பட்டம் பெற்றிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 467 ஆக உயர்ந்துள்ளது.
நகரவாசிகள் மற்றும் கல்லூரிப் பட்டதாரிகளின் அதிகரிப்பானது நாட்டின் தரமான வேலைத்திறன் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றை மேம்படுத்துபவைகளாக உள்ளன. இந்த அளவு, பூஜ்ஜியம் முதல் 14 வயதுடையவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் கணிசமானதல்ல என்றபோதிலும், சீரமைக்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுச் செயல் திறனை மெயப்பிக்கும் வகையில் உள்ளது. இந்த வளர்ச்சிப் போக்கு தொடரும் நிலையில் மொத்த மக்கள் தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கைக்கு எதிரான விகிதத்தைச் சிறப்பாகக் கையாள முடியும்.
இப்பின்னணியில் கொள்கை வகுப்பாளர்கள் திறமையான பணியாளர்களை உருவாக்குதல், மற்றும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் போக்கில் முதியவர்கள் சார்ந்த புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்களோடு புதிய வளர்ச்சி வாய்ப்புகளையும் வேலை உருவாக்குநர்களையும் இணைக்க வேண்டியது அவசியம்.
புதுமைச்சார்பு மற்றும் பிறப்புச் சார்பு முயற்சிகள் கொண்ட ஒரு நாடு தன்னளவு மக்கள் தொகை கொண்ட நாட்டுடன் ஒப்பிடத்தக்கதாகும். உழைக்கும் வயதுடையவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக வீழ்ச்சியடையும் ஒரு நாடு வளமடைவதற்கான இலக்கை உணர்தல் கடினம். எனவே, அதன் பொருட்டு உருவாக்கப்படும் கொள்கைகள் சிறந்த இலக்கையும் பயனையும் கொண்டிருக்கும் நிலையில் அவற்றால் சமாளிக்க விரும்பும் அறைகூவல்களின் அவசரநிலை மற்றும் தன்மையையும் பிரதிபலிக்க முடியும். தற்போது அதற்கான பாதையில் சீனா நடைபோடத் தொடங்கியுள்ளது.