உலக விண்வெளி ஒத்துழைப்பு
2021-05-16 18:58:27

சீனாவின் தியன் வென்-1 ஆய்வுக் கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரை இறங்கியதற்கு அமெரிக்கத் தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், ரஷிய கூட்டாட்சி விண்வெளி நிறுவனம், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் முதலிய நிறுவனங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

அறிவியல் தொழில் நுட்பத் துறையில், செவ்வாய் கிரக ஆய்வு, மனித குலம், பிரபஞ்சத்தை ஆய்வு செய்வதற்கான ஒரு முக்கியமான பகுதியாகும். அதே வேளையில், சீனாவின் செவ்வாய் கிரக ஆய்வுக் கடமை, சர்வதேச ஒத்துழைப்புக்கும் புதிய மேடையை உருவாக்கியுள்ளது. இந்த ஆய்வு கலம், முன்னர் அறிந்திராத பல புவியியல் தகவல்களைப் பெற்று, செவ்வாய் மற்றும் பிரபஞ்சம் தொடர்பான புரிதலை மேம்படுத்த உதவும் என்று சர்வதேச அறிவியலாளர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

"விண்வெளி போட்டிக்குப்" பதிலாக, "விண்வெளி ஒத்துழைப்பானது" முழு மனித இனத்தின் கூட்டு நலனுக்குப் பொருந்தியது என்பதை நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் சீனா நிரூபித்துள்ளது.