பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலில் அமெரிக்காவின் தவறுகள்
2021-05-17 20:20:22

ஐ.நா பாதுகாப்பவையின் தலைவர் நாடான சீனாவின் தலைமையில், பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் பற்றி 16ஆம் நாள் அவசரக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. மோதலில் ஈடுபடும் இரு தரப்புகளும் உடனடியாக வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்றும், சர்வதேசச் சமூகம் குறிப்பாக அமெரிக்கா பொறுப்புடன் நேர்மையான நிலைப்பாட்டின்படி செயல்பட்டு பாதுகாப்பவையின் இணக்க முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிகழும் மிகக் கடுமையான மோதல் இதுவாகும். இதிலிருந்து அமெரிக்காவின் மோசமான மத்தியக் கிழக்கு கொள்கை பிரிக்கப்பட முடியாத ஒன்றாகும்.

தவிரவும், இப்புதிய மோதலில் நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலைமையிலே அமெரிக்கா மனித உரிமை என்பதை மீண்டும் வசதியாகப் பயன்படுத்தி ஐ.நா பாதுகாப்பவை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளா வண்ணம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.