மனித உரிமையின் பாதுகாப்பவளர் என்ற அமெரிக்காவின் முகமூடி
2021-05-19 19:03:08

பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலில் இதுவரை 63 குழந்தைகள் உள்ளிட்ட 217 பாலஸ்தீன அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இத்தகைய கடுமையான மனித நேய சீற்றத்தைத் தடுக்க அமெரிக்க அரசு என்ன செய்தது?

இஸ்ரேலுக்கு தற்காப்புரிமை உள்ளது என்ற காரணமாக, இம்மோதலை நிறுத்துவதற்காக ஐ.நா பாதுகாப்பவை கூட்டறிக்கை வெளியிடுவதை அமெரிக்கா 3 முறை தடுத்து நிறுத்தியது. மேலும் இஸ்ரேலுக்கு 73.5 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்யவுள்ளது என்று பைடன் அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. பாலஸ்தீன மக்களுக்கு மனித உரிமை உள்ளதா என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனின் சமூக வளையத்தில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முஸ்லீம் மக்களின் மனித உரிமையை அமெரிக்க அரசியல்வாதிகள் தங்களுக்கு வசதியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்களின் கண்களில் சின்ச்சியாங்கின் செழுமையான வளர்ச்சி தெரிவது இல்லை. போர் எனும் சுவாலையில் தள்ளாடி வரும் பாலஸ்தீன மக்களும் தெரிவது இல்லை. மனித உரிமையின் பாதுகாப்பவளர் என்ற அமெரிக்காவின் முகமூடி கழன்று விடுவது உறுதி.