அமெரிக்காவே முதன்மை என்ற கொள்கையின் தவறு
2021-05-19 10:02:46

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் தொடர்ந்து ஏற்படுத்திய அமெரிக்காமே முதன்மை என்ற கொள்கை உலகில் இன்னல்களை உருவாக்கி வருகின்றது என்று அமெரிக்காவின் லின்ட்சை குழுமத்தின் உயர் நிலை ஆலோசகர் ஜோசைப் சுலிவன் அண்மையில், தூதாண்மை கொள்கை என்ற இணையத்தளத்தில் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி தேசியவாதக் கொள்கையால் கரோனா தடுப்பூசி சமநிலையில் வினியோகிக்கப்படவில்லை. உலகில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இது முக்கிய தடையாக உள்ளது. அமெரிக்கா தடுப்பூசி தேசியவாதத்துக்கு பங்காற்றி வருகின்றது. ஏப்ரல் 25ஆம் நாள் வரை, அமெரிக்கா ஏற்றுமதி செய்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 30 இலட்சம் மட்டும். இவை, அமெரிக்கா தயாரித்த தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் 1.1 விழுக்காடு மட்டும் வகிக்கிறது என்று பிரிட்டனின் ஃபைனாசியல் டைம்ஸ் செய்திதாளில் வெளியிடப்பட்டது.

இதை தவிர்த்து, அமெரிக்கா பண வீக்க அழுத்தத்தை உலகிற்கு செலுத்தியுள்ளது. அமெரிக்க அரசின் பொருளாதார கொள்கை தனது பொருளாதார வளர்ச்சிக்குத் துணை புரியும். ஆனால், இது, தானியம் உள்ளிட்ட பொருட்களின் விலை பெருமளவில் அதிகரிப்பதை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவே முதன்மை என்ற கொள்கையைக் கைவிடுவது பற்றி பேசிய போதிலும், பைடன் அரசு, இந்த தவறான பாதையில் தொடர்ந்து நடக்கின்றது.