தைவான் விவகாரத்தைப் பயன்படுத்தி சீன உள்விவகாரத்தில் தலையிடும் அமெரிக்கா
2021-05-21 10:28:40

74ஆவது உலக சுகாதார மாநாடு விரைவில் தொடங்க உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சில மேலை நாடுகள் தைவான் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளைப் போல, இவ்வாண்டு உலகச் சுகாதார அமைப்பு தைவானுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கவில்லை.

அவற்றின் முயற்சி தோல்வியுற்றே தீரும். இச்செயல் ஒரே சீனா என்ற கோட்பாட்டுக்கும் சர்வதேச பொது கருத்துக்கும் அறைகூவல் விடுத்துள்ளது அதற்கான காரணமாகும்.

தைவான் விவகாரத்தைப் பயன்படுத்தி, அமெரிக்கா மீண்டும் மீண்டும் சீனாவின் மீது அவதூறு பரப்புவதுடன், சீன உள்விவகாரத்தில் தலையிட்டும் வருகிறது. ஆனால், கரோனா வைரஸ் பரவலுக்குப் பின், சீன நடுவண் அரசு, வைரஸ் தடுப்பிலான இரு கரை ஒத்துழைப்புக்கு மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதை வெளியுலகம் கண்டுள்ளது.

அதோடு, தைவானுக்கு ஆதரவளிப்பதாக கூறும் அமெரிக்க அரசியல்வாதிகள் எந்தவிதமான உதவியையும் தைவானுக்கு வழங்கவில்லை. 19ஆம் நாள் தைவான் பிரதேசத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை, அமெரிக்கா எந்த ஒரு தடுப்பூசியை தைவானுக்கு விற்பனை செய்யவில்லை என்று கூறினார். வெளிப்படையாக பார்த்தால், தைவானை ஒரு அரசியல் கருவியாகவே அமெரிக்க அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருவது தெரிகிறது.