அவதூறு எதிர்நோக்கும் போது பதிலடித்தல் வேண்டுமா?
2021-05-21 20:36:13

சீன-ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீட்டு உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கும் முன், ஐரோப்பிய ஒன்றியதின் மீதான தடை நடவடிக்கைகளை சீனா முதலில் நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் மே 20ஆம் நாள் வெளியிட்ட ஒரு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

சீனா, ஏன் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது தடை நடவடிக்கைகளை மேற்கொண்டது?இவ்வாண்டின் மார்ச் சின்ச்சியாங் பிரதேசம் தொடர்பான ஆதரமற்ற கூற்றின் அடிப்படையில், சீன மக்கள் சிலர் மற்றும் தொழில் நிறுவனங்கள் சிலவற்றின் மீது ஒருசார்பு தடை நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டு, சீனாவின் உள்விவகாரங்களில் தலையிட்டது. இதனால் தான் சீனா பதில் நடவடிக்கையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது தடை மேற்கொண்டது.

தற்போது ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் கோரிக்கையானது, அவதூறை எதிர்கொள்ளும் போது சீனா பதில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பொருள் தருகிறது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இத்தீர்மானத்தால் விரைவில் பொருளாதாரம் மீட்சி அடையும் என்ற நம்பிக்கை பாதிக்கப்படுவது உறுதி.