தொற்று நோய் எதிர்ப்பு சர்வதேச ஒத்துழைப்புக்கு சீனாவின் புதிய முயற்சி
2021-05-22 18:15:31

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 21ஆம் நாள் காணொலி வழியில் உலக உடல் நல உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். உலகளாவிய கரோனா வைரஸுக்கு எதிரான ஒத்துழைப்பில் ஜி-20 உறுப்பு நாடுகள் தங்களது கடமையைச் செயல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், ஐந்து முன்மொழிவுகளை முன்வைத்து, ஐந்து புதிய நடவடிக்கைகளை அறிவித்தார்.

மனித குலம் கடினமான அறைக்கூவல்களை எதிர்நோக்குகின்றது. அந்த அறைக்கூவல்கள் வைரஸால் மட்டும் ஏற்பட்டதல்ல, சில நாடுகளின் தன்னலமான செயல்களுடனும் தொடர்புடையவையாக உள்ளன. சில மேலை நாடுகள் தடுப்பூசிகளைப் பதுக்கி தொற்று நோய்க்கு அரசியல்மயமாக்கிய செயல்கள், தொற்று நோயை எதிரான சர்வதேச ஒத்துழைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் மே திங்களில் நடைபெற்ற 73ஆவது உலகச் சுகாதார மாநாட்டில் உலகளாவிய தொற்று நோய் எதிர்ப்பு ஒத்துழைப்பு  தொடர்பாக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அறிவித்த ஐந்து நடவடிக்கைகள் தற்போது காலதாமதமின்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், தடுப்பூசிகளுக்கு அவசர தேவையான 80க்கும் அதிகமான வளரும் நாடுகளுக்கு சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது. 43 நாடுகளுக்கு சீனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது வரை, உலகில் 30கோடி தடுப்பூசிகளை சீனா விநியோகித்துள்ளது. இந்தத் தடுப்பூசிகள் வளரும் நாடுகளில் தொற்று நோயை எதிர்ப்பதற்காக முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ப்ளூம்பெர்க் வெளியிட்ட விமர்சனக் கட்டுரை ஒன்றில், சீனாவின் பங்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளது.

வெகுவிரைவில் தொற்று நோயை தோற்கடித்து, பொருளாதார அதிகரிப்பை மீட்பது என்பது சர்வதேச சமூகத்துக்கு முதன்மை கடமையாகும். இதை நனவாக்க, சீனாவின் முயற்சி மட்டுமே போதாது. இன்றைய உலகிற்கு ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவில் அதிகமாக தேவைப்படும். தொற்று நோயை எதிர்ப்பதில் சீனா பலமுறை வலியுறுத்தி வெளிக்காட்டிய மிக முக்கிய தகவல் இதுவாகும்.