கலப்பு நெல்லின் தந்தைக்கு உலகின் பாராட்டுக்கள்
2021-05-24 19:43:54

கலப்பு நெல்லின் தந்தை என அழைக்கப்படும் சீன விஞ்ஞானி யுவான் லோங்பிங்கின் இறுதி சடங்கு, மே 24ஆம் நாள், ஹுனான் மாநிலத் தலைநகர் சாங்ஷாவில் நடைபெற்றது. அவரின் மறைவுக்கு 22ஆம் நாள் முதல் ஐ.நா உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள், பல நாடுகளின் அரசாங்கங்கள், உலகின் செய்தி ஊடகங்கள் மற்றும் இணைய பயனர்கள் அடுத்தடுத்து அஞ்சலி செலுத்தினர்.

'அவருடைய நெல் ஆராய்ச்சி உலகிற்கு நன்மை அளித்துள்ளது' 'உண்மையான வீரர்' '100 கோடிக்கும் பேருக்கு உணவு பாதுகாப்பு அளித்துள்ளது' உள்ளிட்ட  பல பாராட்டுக்கள் யுவான் லோங்பிங்கிற்கு கிடைத்துள்ளது. யுவான் லோங்பிங் மற்றும் அவரது ஆய்வுக் குழுவின் கலப்பு நெல் விதைத் தொழில் நுட்பம்  உலகிற்கு ஆற்றியுள்ள பெரும் பங்களிப்பை இத்தகையப் பாராட்டுக்கள் எடுத்துக்காட்டியுள்ளன.

கடந்த 1970 ஆண்டுகளில் சீனாவில் கலப்பு நெல் விதை மூலம் நெல் விளைச்சல், சாதாரணமான நெல்களை விட 20விழுக்காடு அதிகம். இந்த முயற்சியுடன் ஆண்டுதோறும் 7கோடி பேருக்கு உணவு அளிக்கப்படும். கடந்த பல பத்து ஆண்டுகளில், யுவான் லோங்பிங், 80க்கும் மேலான வளரும் நாடுகளுக்கு 14ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலப்பு நெல் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இந்தியா, வியட்நாம், அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஆப்பிரிக்காவில் பெருமளவில் கலப்பு விதை ரக நெல்கள் சாகுபடி செய்யப்படும். யுவான் லோங்பிங் மற்றும் அவரது ஆய்வுக் குழு, உலகின் தானிய பாதுகாப்பை மேம்படுத்தி, உலகின் பசி மற்றும் வறுமை பிரச்சினையைக் குறைத்துள்ளது. சர்வதேச பார்வை உடைய திறமை இது தான். அதை என்றுமே நினைவில் வைக்கிறோம் என்று அமெரிக்க இணைய பயன்பாட்டாளர் கேவின் பதிவிட்டுள்ளார்.

யுவான் லோங்பிங் உலகிற்கு செய்துள்ள நன்மைகள் ஏராளம். அது போல, விஞ்ஞானி டுயோவ்யோவ் அம்மையாரின் தலைமையில் அவரது ஆய்வுக் குழு, ஆர்ட்டெமிசினின் பொருட்களின் மூலம் மலேரியா நோயை குணமாக்கும் வழியைக் கண்டுப்பிடித்துள்ளது. இதுவே, உலகின் பல பத்து இலட்சம் மலேரியா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.   யாதும் ஊரே யாவரும் கேளிர்  என்ற சொல்லை சீனாவின் விஞ்ஞானிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.