ஒரே சீனா என்ற கோட்பாடு மாறாது
2021-05-25 21:14:16

தைவானை உலக சுகாதாரப் பேரவையில் பார்வையாளராக பங்கேற்க அழைக்கும் முன்மொழிவை நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பது என்பது, 24ஆம் நாள் நடைபெற்ற 74ஆவது உலக சுகாதாரப் பேரவையின் கூட்டத்தொடரில் நிராகரிக்கப்பட்டது. ஒரே சீனா என்ற கோட்பாட்டைச் சீர்குலைக்கும் இலக்கத்துடன் மேற்கொள்ளும் எந்த செயல்களும் இறுதியில் தோல்வி அடைவதை இது காட்டுகின்றது.

சீனாவின் தைவான் பிரதேசம், உலகச் சுகாதாரப் பேரவையில் பங்கெடுப்பது, ஒரே சீனா என்ற கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும். ஐ.நா.பேரவையின் 2758ஆவது இலக்கு உடைய தீர்மானத்திலும் உலகச் சுகாதாரப் பேரவையின் 25.1இலக்கு உடைய தீர்மானத்திலும் இது தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு முதல் தைவான் பிரதேசத்தின் ஆட்சிக்கு வந்துள்ள ஜனநாய முற்போக்கு கட்சி, 1992ஆம் ஆண்டில் தைவான் நீரிணையின் இரு கரைகளுக்கிடையே உருவாக்கியுள்ள உடன்பாட்டை ஏற்றுக்கொள்ளாமல், தைவான் சுதந்திரத்தில் ஈடுபட முயன்று வருகின்றது. இச்சூழலில், தைவான் உலகச் சுகாதாரப் பேரவையில் பங்கெடுக்கும் அரசியல் அடிப்படை இல்லை. ஜனநாய முற்போக்கு கட்சி சீர்குலைத்த முடிவு இது தான்.