இனவெறியால் வன்முறையில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவுக்கு உலகை வழிநடத்தும் தகுதி உள்ளதா?
2021-05-26 20:31:42

மே 25ஆம் நாளன்று, அமெரிக்காவின் பல இடங்களில், ஓராண்டுக்கு முன்பு வெள்ளையின காவல்துறையினால் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிளாய்ட்டிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஓராண்டுக் காலம் ஆகி விட்டது. ஆனால், அமெரிக்காவில் இனவெறியால் நடத்தப்படும் வன்முறை சட்ட அமலாக்கம் குறையவில்லை. மாறாக, ஓரளவில் இந்த செயலுக்கு மேலதிக பாதுகாப்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் அமைப்பு முறை ரீதியிலான இனவாதம் தீவிரமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டைம்ஸ் எனும் இதழ் வெளியிட்ட கட்டுரையில்,

கோவிட்-19 தொற்றினால் பலர்  வீடுகளில் முடங்க நேரிட்டது. ஆனால் பல ஆய்வுகளின்படி, 2020ஆம் ஆண்டு ஜுன் திங்கள் முதல் அமெரிக்க காவல்துறையினர் மனிதர்களைக் கொலை செய்த எண்ணிக்கை  குறைவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனவெறிக் காரணமாகவே, சட்ட அமலாக்கத்தில் வன்முறைச் செயல் மேலும் மோசமானது. “போலீஸ் வன்முறை நிலப்படம்” என்று அமெரிக்காவின் சுதந்திரமான புலனாய்வுத் திட்டத்தின் புள்ளிவிவரங்களின்படி,  2020ஆம் ஆண்டு அமெரிக்க காவல்துறையினரால் கொல்லப்பட்ட 1,126 பேரில் 28சதவீதம் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2013 முதல் 2020 ஆண்டு வரை, காவற்துறையினர் சட்ட அமலாக்கத்தின் பேரில், உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்குகளில் 98.3 விழுக்காட்டு காவல்துறையினர் மீது வழக்கு தொடுக்கப்படவில்லை என்பதை சுதந்திரமான புலனாய்வுத் திட்டத்தின் தரவுகள் காட்டுகிறது.

இதிலிருந்தே இனவாதம் அமெரிக்காவில் முற்றிலும் நீக்க முடியாது  என்பது தெளிவாக தெரிகிறது.