கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர்வதேச கள ஆய்வு மீதான சீனாவின் கருத்து
2021-05-28 10:20:38

கரோனா வைரஸ் பற்றிய ஆரம்பத் தொற்றுகள் உலகின் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டு வருகின்றன. இது, இவ்வைரஸின் தோற்றம் தொடர்பான ஆய்வை உலகளவில் மேற்கொள்ளப்பட வேண்டியதை வெளிப்படுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் தொற்றுக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களிடையே கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் முன்னாள் தலைவர் ரெத்ஃபீல்ட் தெரிவித்துள்ளார். இதனால்,  அமெரிக்காவில் கரோனா பாதிப்பின் முதலாவது தொற்று எப்போது தோன்றியது என்னும் கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் கரோனா வைரஸின் தோற்றம் பற்றி புலனாய்வு மேற்கொள்ள அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் 26ஆம் நாள் உளவு நிறுவனத்துக்குக் கட்டளையிட்டுள்ளார். அதோடு, சீனா சர்வதேசப் புலனாய்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

வைரஸின் தோற்றம் குறித்த ஆய்வானது அறிவியல் துறையைச் சேர்ந்த ஒன்றாகும். இதற்கு உளவு நிறுவனங்களின் புலனாய்வு தேவையா?வைரஸ் தோற்றுவாய் பற்றி ஆய்வு மேற்கொள்ள சீனாவைப் போல அமெரிக்காவும் உலக சுகாதார அமைப்புக்கு அழைப்பு விடுக்கலாமா?இது பற்றிய அமெரிக்காவின் பதிலுக்காகக் காத்திருக்கின்றோம்.