ஹாங்காங்கின் அமைதி உறுதிப்பாட்டு வளர்ச்சி
2021-05-29 17:28:44

சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சட்டமியற்றல் குழு, அதிக வாக்குகளுடன் 2021ஆம் ஆண்டு தேர்தல் முறையை மேம்படுத்தும் வரைவுத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் 27ஆம் நாள் கூறுகையில், ஹாங்காங் மக்கள் தன்னாட்சியில் பங்கெடுத்து, கருத்துக்களை வெளிப்படுத்தும் வழியை இது கடுமையாக தடைசெய்துள்ளது என்றார்.

அமெரிக்காவின் கருத்து எதிர்பார்த்த ஒன்றுதான். ஹாங்காங்கின் ஜனநாயக அமைப்பு முறையில் முன்னேற்றம் அடைந்தபோதெல்லாம், அமெரிக்கா பொய்களைப் பரப்புவது வழக்கம்.

ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமை ஆகியவற்றில் அமெரிக்கா வெளியிட்ட ஹாங்காங் பற்றிய அறிக்கைகள் ஹாங்காங் அமைதியை சீர்குலைத்து, சீன வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, சீன உள் விவகாரத்திலும் தலையீடு செய்தது.

சீன அரசு மற்றும் பொது மக்களின் முயற்சிகளால், ஹாங்காங்கில் புதிய ஒழுங்கு மற்றும் தோற்றம் காணப்பட்டுள்ளன. தேர்தல் முறையை மேம்படுத்துவது என்பது ஹாங்காங் மக்களின் மனதில் பிறந்த கருத்தும் ஆகும் என்று ஹாங்காங்கின் பல பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.