ஜப்பானின் சூழ்ச்சியால் உலகம் ஏமாறாது
2021-05-29 18:57:17

சீனாவுக்கான ஜப்பான் தூதரகம் தனது இணையதளத்தில் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கழிவு நீர் பிரச்சினை தொடர்பான கேள்விகள் மற்றும் பதில்களை வெளியிட்டது. கடலில் ஜப்பான் வெளியேற்ற உள்ள கழிவு நீர், கதிரியக்க நீர் அன்றி, ஏஎல்பிஎஸ்(ALPS) சாதனத்தால் கையாளப்பட்ட நீர்தான் என்றும், இச்செயல் சர்வதேச வழக்கத்துக்குப் பொருந்தியதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஜப்பான் அரசு தொடர்ந்து தவறான செயலில் பிடிவாதமாக ஈடுபட்டு, கருத்தாக்கத்தை மாற்றுவதன் மூலம் சொந்த பொறுப்பைத் தட்டிகழிக்க முயன்று வருகிறது.

ஆனால் ஜப்பானின் சூழ்ச்சியால் உலகம் ஏமாறாது. ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் விபத்தில் ஏற்பட்ட கழிவு நீரில் பல்வகை கதிரியக்க அணுக்கருக்கள் உள்ளன. சிக்கலான பொருட்களைக் கொண்ட இந்த நீர், இயல்பான நிலையில் இயங்கும் அணு மின் நிலையத்தில் குளிரூட்டும் நீருடன் முற்றிலும் வேறுபட்டது என்று பல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச வரையறைக்கு ஏற்ப குளிரூட்ட நீரை கடலில் வெளியேற்ற முடியும். ஆனால், கதிரியக்க நீரை வெளியேற்றக் கூடாது. ஆனால், இவ்விரண்டையும் ஒரே மாதிரி என ஜப்பான் குழப்பிக் கொள்கிறது. இது, சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை இழந்து விடும் இழிவான செயலாகும்.