அமெரிக்கா தனது வேலையை சிறப்பாக செய்ய வேண்டும்
2021-06-01 20:18:07

74ஆவது உலக சுகாதார மாநாடு 1ஆம் நாள் முடிவடைந்தது. இக்கூட்டத்தின் போது, புதிய ரக கரோனா வைரஸ் தோன்றிய கடத்தைக் கண்டுபிடிக்கும் பிரச்சினையை அமெரிக்க அரசியல்வாதிகள் மீண்டும் வேண்டுமென்றே பரப்புரை செய்து, சர்வதேச கள ஆய்வில் சீனா ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரினர். தற்போது, உலக சுகாதார அமைப்பின் தலைமையில் வைரஸின் தோற்றத்தைத் தொடர்ந்து தேடும் பணிகளின் சீனாவின் பங்கு முடிவடைந்தது. ஆனால், தொற்றுநோய் தடுப்பு குறித்த சொந்த சந்தேகங்களை அமெரிக்கா முதலில் தெளிவுபடுத்தி, சர்வதேச சமூகத்தின் கள ஆய்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். தொற்று நோய் பரவலுக்கு பின், சர்வதேச சமூகத்திற்கு அமெரிக்கா தெளிவாக விளக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. மிகவும் முக்கிய ஃபோர்ட் டெட்ரிக் உயிரியல் ஆய்வகம் இவற்றில் ஒன்றாகும். அத்துடன், உலகில் 200க்கும் மேற்பட்ட உயிரியல் ஆய்வகங்களை அமெரிக்கா கொண்டுள்ளது. அவற்றின் செயல்பாடுகள், பயன்பாடுகள், பாதுகாப்பு ஆகியவற்றை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது. தவிர, அமெரிக்காவின் முதல் நோயாளி எப்போது தோன்றினார் என்பது இதுவரை தெரியாது. சீனாவைப் போலவே, அமெரிக்கா உலக சுகாதார அமைப்புடன் இணைந்து, வைரஸ் தோற்றத்தை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, உலக தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு பணிகளுக்கு பங்காற்ற வேண்டும்.