© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அண்மையில் டென்மார்க் வானொலி நிறுவனம் வெளியிட்ட சிறப்பு அறிக்கையில், அமெரிக்க தேசியப் பாதுகாப்பு நிறுவனம் டென்மார்க் இணையத்தைப் பயன்படுத்தி, அசல் தரவுகளைப் பெற்று, ஜெர்மனி தலைமையமைச்சர் ஏஞ்சலோ மெர்க்கெல் அம்மையார் உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் பலரின் செயல்பாடுகளை உளவுபார்த்தது எனத் தெரிவிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொலைபேசி மற்றும் இணைய தகவல்களை அமெரிக்க அரசு விரிவான முறையில் உளவுபார்த்ததை செய்தி ஊடகங்கள் 2013ஆம் ஆண்டு அம்பலப்படுத்தின. மெர்க்கெலின் கைப்பேசி 10 ஆண்டுகளாகக் கண்காணிக்கப்பட்டது.
அண்மையில், ஜெர்மனி, பிரான்ஸ், நேர்வே, ஸ்வீடன் போன்ற பல ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிடம் விளக்கம் கேட்டன. இது வரை, இவற்றின் கூட்டணி நாடான அமெரிக்கா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
ஐரோப்பியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலாதிக்கத்தைக் கடைபிடிக்கும் அமெரிக்க அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை, “அமெரிக்காவே முதல்” என்பது அவர்களின் ஒரே கொள்கையாகும்.
10 நாட்களுக்கு பின், அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் ஐரோப்பாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆனால், இந்தப் புதிய உளவு பார்ப்பு சம்பவம் ஐரோப்பிய நாடுகளுக்கு தலையில் அடித்தது போல் உள்ளது. நீண்டகாலமாக ஒற்றுக்கேட்டதால், சர்வதேச நற்பெயரை அமெரிக்கா இழந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் உண்மையான முகத்தைக் கண்டுகொள்ள வேண்டும்.