மனிதகுலத்தின் எதிரியாக அமெரிக்க அரசியல்வாதிகள் முயன்று வருகின்றனரா?
2021-06-02 17:34:40

வைரஸ் தோற்ற ஆய்வைப் பயன்படுத்தி சீனா மீது மீண்டும் பழி தூற்றும் அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் முழு உலகின் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

பொய் கூற்றை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்ற அமெரிக்க உளவு துறையிடம் கேட்பதற்குப் பதிலாக அறிவியல் துறையிடம் வைரஸ் தோற்றத்துக்கான விடையைக் கேட்க வேண்டும் என்பது, பொது அறிவு கொஞ்சம் கொண்டவர்களும் கூடத் தெரியும். நோய் தொற்று தடுப்பின் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டிய அமெரிக்க அரசியல்வாதிகள் இப்பொறுப்பை தட்டிகழித்து, சீனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசியல் கேலிக்கூத்தை திட்டமிட்டு செயல்படுத்தி, அறிவியலை காலில் மிதித்து மக்களின் உயிரை அலட்சியம் செய்துள்ளனர்.

சுயநலனை முதலிடத்தில் வைத்து அறிவியலுக்குப் புறம்பான நிலையில் செயல்படும் அமெரிக்க அரசியல்வாதிகளால், அந்நாட்டு மக்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 6 லட்சம் உயிரிழப்பு, அவர்களின் மனச்சாட்சியைத் எழுப்ப முடியவில்லை. வைரஸ் தோற்ற ஆய்வை அரசியலுடன் இணைக்கும் அவர்கள் உலக மக்களின் உயிர் பாதுகாப்பை மேலும் பெரும் அபாயமான நிலையில் வைப்பதில் ஐயமில்லை. மனிதகுலத்தின் எதிரியாக அவர்கள் மாற முயல்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

வைரஸ் தோற்ற ஆய்வு அறிவியல் சார் விஷயம். குற்றம் சாட்டும் விளையாட்டு அல்ல. இது, அமெரிக்க அரசியல்வாதிகளின் சுயநலனை பூர்த்தி செய்யும் கருவியாக ஒருபோதும் மாற்றக் கூடாது. சுயநலனுக்காக அறிவியலை காலில் போட்டு மிதிப்பவருகளுக்கு இறுதியில் உறுதியாகத் தண்டனை கிடைக்கும்.