வைரஸ் தோற்ற ஆய்வு மேற்கொள்ள உளவுத் துறைக்கு உத்தரவிட்ட அமெரிக்காவின் கேலிக்கூத்து
2021-06-04 17:14:30

கரோனா வைரஸ் தோற்ற ஆய்வு தொடர்பாக அமெரிக்க அரசு அண்மையில் வெளியிட்ட 300 ஆங்கில சொற்கள் கொண்ட அறிக்கை ஒன்றில், உளவு நிறுவனம் என்பது 6 முறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, ஆனால் அறிவியல் என்ற வார்த்தை ஒருமுறை கூட இடம்பிடிக்கவில்லை.

ஆய்வகத்திலிருந்து கரோனா வைரஸ் கசிந்தது என்ற கூற்று, உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அறிவியல் துறையால் மறுக்கப்பட்டதால், அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் உளவு நிறுவனத்தைப் பயன்படுத்தி, அரசியல் முறையில் அறிவியல் சார் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, சீனாவை பலிகடாவாக மாற்றும் நாடகத்தை தொடர்ந்து அரங்கேர்றி வருகின்றனர். அறிவியலுக்குப் புறம்பான அவர்களின் செயல்கள் மிகவும் அபத்தமாகி உள்ளது!

கரோனா வைரஸ் தோற்ற ஆய்வில், உளவாளிகளுக்குப் பதிலாக அறிவியலாளர்களைச் சார்ந்திருக்க வேண்டும், குற்றத்தின் யூகத்துக்குப் பதிலாக நியாயமான நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும், எதிர்ப்புக்குப் பதிலாக ஒற்றுமையுடன் ஒத்துழைக்க வேண்டும். வைரஸ் தோற்ற ஆய்வு மேற்கொள்ள உளவுத் துறைக்கு அமெரிக்கா உத்தரவிட்டு, தனது அரசியல் நோக்கத்துக்காக இவ்வாய்வுக்கான சர்வதேச ஒத்துழைப்பில் வேண்டுமென்றே தலையிடும் செயல், எல்லையற்ற பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவின் இச்செயல்தான் விசாரிக்கப்பட வேண்டும்.