அமெரிக்காவின் உண்மையான நடவடிக்கை எங்கே?
2021-06-08 20:15:32

உலகில் 44 விழுக்காடு கரோனா தடுப்பூசிகள் இப்போது உயர் வருமானமுடைய நாடுகளில் போடப்பட்டுள்ளன. ஆனால் 0.4 விழுக்காடு மட்டும் கரோனா தடுப்பூசிகள் குறைந்த வருமானமுடைய நாடுகளில் போடப்பட்டுள்ளன என்று 7ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைமை செயலாளர் டெட்ரோஸ் அறிவித்தார்.

ஜுன் இறுதியில் உலகிற்கு 8 கோடி கரோனா தடுப்பூசிகள் வினியோகிக்கப்படும் என்று அண்மையில் அமெரிக்கா வாக்குறுதி அளித்தது. ஆனால், இது வரை அமெரிக்காவின் உண்மையான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் பார்க்கவில்லை.

கரோனா தடுப்பூசிகளை வினியோகிப்பது, சர்வதேச உதவியாகும். அரசியல் ஆயுதமல்ல.

இப்போது வரை, சீனா, 80க்கும் மேலான வளரும் நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி உதவி அளித்துள்ளது. 40க்கும் மேலான நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மொத்த எண்ணிக்கை 35 கோடியைத் தாண்டியுள்ளது.