அமெரிக்காவில் கட்டாய உழைப்பு மற்றும் குழந்தை தொழிலாளி பிரச்சினை
2021-06-11 19:55:41

ஜுன் 12ஆம் நாள் உலக குழந்தை தொழிலாளர் இல்லாத தினம் ஆகும். இதை முன்னிட்டு, சர்வதேச தொழிலாளர் அமைப்பும், ஐ.நா குழந்தை நிதியமும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டு உலகளவில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து விட்டது. இது கடந்த 20 ஆண்டுகாலத்தில் முதன்முறையாகும். அதே வேளையில், ஜெனிவாவில் காணொலி மூலம் நடைபெற்ற 109ஆவது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில், அமெரிக்காவில் கட்டாய உழைப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் முதலிய பிரச்சினைகள் பற்றி இம்மாநாட்டில் பரந்துபட்ட அளவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் செயல், உலக குழந்தை தொழிலாளர் பிரச்சினையைத் தீவிரமாக்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு, அமெரிக்கா மனித உரிமையை மீறும் செயல்களில் ஒரு சிறு பகுதி மட்டுமே. தொடர்புடைய தரவுகளின்படி, ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு அப்பாலுள்ள நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட கட்டாய உழைப்பாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

மனித உரிமைப் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்பதை அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும். சர்வதேச தொழிலாளர்கள் பொது ஒப்பந்தத்தை நிறைவேற்றி, கட்டாய உழைப்பு பிரச்சினையைத் தீர்த்து, அமெரிக்க மக்களின் சட்டப்பூர்வ உரிமை நலனை எவ்வாறு உத்தரவாதம் செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.