தைவான் சுதந்திரம் செல்லாது!
2021-06-12 20:10:10

சீனாவைக் கட்டுப்படுத்துவதில் தைவானை மேலும் வசதியாகப் பயன்படுத்தும் வகையில், தடுப்பூசி உதவி வழங்க அமெரிக்கா பல முறை வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், அது வாக்குறுதி அளித்த 7.5 இலட்சம் தடுப்பூசி இதுவரையிலும் யாராலும் காண முடியவில்லை. அவ்வாறே வந்தாலும்கூட, 2.3 கோடி மக்கள் தொகை கொண்ட தைவானுக்கு எந்த அளவில் அது பயனளிக்கும் என்று மக்கள் சந்தேகம் எழுப்புவது இயல்பே.

ஆனால், தற்போதைய தைவான் அதிகார வட்டாரம் தடுப்பூசி உதவி அளிப்பது பற்றிய பெரு நிலப்பகுதியின் நல்லெணத்தைப் புறக்கணித்து அமெரிக்காவை மட்டும் சார்ந்திருக்கின்றது. தைவான் மக்களின் பாதுகாப்பு இவ்வாறு விலை கொடுக்கப்பட்டு வருகின்றது. இதனிடையில், பெரு நிலப்பகுதியில் மே திங்கள் இறுதி வரை 62 ஆயிரம் தைவான் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தைவான் மக்களின் உடல் நலத்தில் யார் உண்மையில் கவனம் செலுத்துகின்றார்கள் என்பது தெளிவாக உள்ளது.

தைவான் பிரச்சினை சீன-அமெரிக்க உறவில் மிகவும் முக்கியத்துவம் மற்றும் உணர்வலை தன்மை வாய்ந்த பிரச்சினையாகும். ஒரு சீனா என்ற அடிப்படை எல்லையை எந்த ஒரு சக்தியும் கடந்து செல்வதற்குச் சீனா ஒருபோதும் அனுமதிக்காது.