மனிதக் குலத்துக்கு நன்மை அளிக்கும் சீன விண்வெளித் துறையிலான பங்கு
2021-06-17 19:12:33

மனிதக் குலத்துக்கு நன்மை அளிக்கும் சீன விண்வெளித் துறையிலான பங்கு_fororder_rBABC2DLI1CANQiXAAAAAAAAAAA902.1000x563

விண்வெளிவீரர்களுடன் ஷென்சோ-12 விண்கலம், விண்ணில் 17ஆம் நாள் காலை 9 மணயளவில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. விண்வெளி நிலைய ஆக்கப்பணிக்காக, மனிதரை விண்ணுக்கு அனுப்பும் சீனாவின் முதலாவது திட்டப்பணி இதுவாகும்.

விண்வெளி, மனிதகுலத்தின் கூட்டுச் செல்வமாகும். சர்வதேச ஒத்துழைப்பு, விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமானது. விண்வெளி நிலைய ஆக்கப்பணியின் போக்கில், விண்வெளி நிலைய செயல்பாட்டு விரிவாக்கம், விண்வெளி அறிவியல் மற்றும் பயன்பாடு, சீன மற்றும் வெளிநாட்டு விண்வெளிவீரர்களின் கூட்டு விமானம், தொழில்நுட்ப சாதனைகளின் மாற்றம் முதலிய துறைகளில் விரிவான மற்றும் ஆழமான சர்வதேச ஒத்துழைப்பை மேற்கொள்ள சீனா திட்டமிட்டுள்ளது.

எதிர்காலத்தில், சீன மற்றும் வெளிநாட்டு விண்வெளிவீரர்கள் சீன விண்வெளி நிலையத்தில் கூட்டாக ஆய்வு மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.