© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
மே திங்கள் சீனப் பொருளாதாரம் சீராக மீட்சியடைந்து வரும் போக்கு தொடர்ந்தது. சீனாவில் தொழிற்துறையும் சேவைத் தொழிலும் நிதானமாக அதிகரித்தன. சந்தை விற்பனை தொடர்ந்து மீட்சியடைந்து வந்தது. நிலையான சொத்து முதலீடு மீட்சி பெற்று, ஏற்றுமதி இறக்குமதி வேகமாக அதிகரித்தது. உலகப் பொருளாதார மீட்சிக்கான உந்து பொறியாக சீனா விளங்குகிறது என்று ரஷியாவின் ரொசிஸ்கயா கசாட்டா செய்தித்தாளில் வெளியான விமர்சனக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனப் பொருளாதாரம் மீட்சியடைந்து வரும் போக்கினை நிலைநிறுத்துவது, சீன அரசு, சீனத் தொழில் நிறுவனங்கள் மற்றும் சீன மக்களின் சளையாத முயற்சிகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது.
தற்போது உலகில் கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பொருளாதார மீட்சியில் உறுதியற்ற காரணிகள் இன்னும் நிலவி வருகின்றன. சீனப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான மீட்சியின் அடிப்படை இன்னும் வலுப்படுத்தப்படும். சாதகமான காரணிகள் அதிகரித்து வருவதுடன்,சீனப் பொருளாதாரம் நிதானமாக மீட்சியடைந்து, உலகப் பொருளாதாரத்தின் உந்து பொறியாக இருக்கும் தகுநிலை வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.